Homeசெய்திகள்சினிமாஓட்டு தான் சக்தி வாய்ந்த ஆயுதம்..... நோட்டாவுக்கு போடாதீங்க..... விஜய் ஆண்டனி அறிவுரை!

ஓட்டு தான் சக்தி வாய்ந்த ஆயுதம்….. நோட்டாவுக்கு போடாதீங்க….. விஜய் ஆண்டனி அறிவுரை!

-

பிரபல இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். ஓட்டு தான் சக்தி வாய்ந்த ஆயுதம்..... நோட்டாவுக்கு போடாதீங்க..... விஜய் ஆண்டனி அறிவுரை!அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம் உள்ளிட்ட படங்கள் வெளியானது. அதை தொடர்ந்து வள்ளி மயில், ஹிட்லர் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இதற்கிடையில் விஜய் ஆண்டனி, ரோமியோ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் இதுவரை நடிக்காத ரொமான்டிக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிர்நாளினி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து யோகி பாபு, இளவரசு, வி டிவி கணேஷ், தலைவாசல் விஜய், சுதா ஸ்ரீஜா ரவி போன்றோர் நடித்துள்ளனர். இந்த படத்தை விஜய் ஆண்டனி தனது குட் டெவில் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க விநாயக் வைத்தியநாதன் இதனை இயக்கியுள்ளார். பரத் தனசேகரன் இசையமைத்துள்ளார். இந்த படம் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. அதே சமயம் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி வருகின்றன. ஓட்டு தான் சக்தி வாய்ந்த ஆயுதம்..... நோட்டாவுக்கு போடாதீங்க..... விஜய் ஆண்டனி அறிவுரை!இந்நிலையில் கோவையில் நடைபெற்ற இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட விஜய் ஆண்டனி, ” கண்டிப்பாக ஓட்டு போடுங்கள். ஓட்டை வீணடிக்காதீர்கள். ஓட்டு தான் உங்கள் கையில் இருக்கும் சக்தி வாய்ந்த ஆயுதம். அரை மணி நேரம் ஆவது யோசித்து ஓட்டு போடுங்கள். நோட்டாவுக்கு ட்ரை பண்ணாதீங்க. நல்லவர்களை தேர்ந்தெடுத்து ஓட்டுப் போடுங்கள்” என்று வலியுறுத்தியுள்ளார்.

MUST READ