ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் இப்படம் அதிகாலையிலேயே திரையிடப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் காலை 9 மணி முதல் இப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ்- ரஜினி – அனிருத் காம்போவில் வெளியாகி உள்ள இந்த படத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு திரண்டு வருகின்றனர். அதன்படி ரசிகர்கள் தங்களின் விமர்சனங்களை சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்து வருகின்றனர். அதாவது வழக்கம்போல் ரஜினி அடித்து தூள் கிளப்பியுள்ளார்.
அனிருத்தின் இசை மிரட்டலாக இருக்கிறது. இருந்த போதிலும் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் ரஜினி ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் ரஜினி ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஏனென்றால் ரஜினியின் கூலி திரைப்படம் வெளியாகும் இதே நாளில் தான் ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்திருக்கும் வார் 2 திரைப்படமும் வெளியாகி உள்ளது.
இந்த படத்திற்காக தமிழகத்தில் 250 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினியின் கூலி படத்திற்கு தமிழகத்தில் 700 முதல் 750 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. பாலிவுட் படத்திற்கு தமிழகத்தில் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருப்பதால் கூலி படத்தின் வசூல் பாதிக்கப்படும் எனவும் கூலி படத்தை இன்னும் அதிகமான திரையரங்குகளில் திரையிட்டிருக்கலாம் எனவும் ரஜினி ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
- Advertisement -