- Advertisement -
சென்னை கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, நடிகர் விஷ்ணு விஷாலின் வீட்டை வெள்ளநீர் சூழந்தது. இது தொடர்பான புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் தீவிர புயலால், சென்னை முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. 47 ஆண்டுகளில் இல்லாத அளவு, 2015-ம் ஆண்டை காட்டிலும் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 15 இடங்களில் அதி கனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பெருங்குடியில் 45 செ.மீ., பூந்தமல்லியில் 34 செ.மீ., ஆவடியில் 28 செ.மீ. மழையும், காட்டுப்பாக்கத்தில் 27 செ.மீ., தாம்பரம் 24 செ.மீ., மகாபலிபுரம், ஐஸ் ஹவுஸில் 22 செ.மீ. மழையும் பதிவானது.


வேளச்சேரி சாலையில் சுமார் 40 அடிக்கு மேல் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதில், பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்ததில், பணியாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதேபோல, அடுக்குமாடி குடியிருப்பும் தரையில் சரிந்தது. கனமழை காரணமாக சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கடும் சேதம் ஏற்பட்டது. மழை நின்ற போதிலும், கட்டடங்களை மழைநீர் சூழ்ந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பலர் அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். சிக்னல், மின்சாரம், உணவு இல்லாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.



