நல்ல தயாரிப்பாளரை நாம் இழந்து விட்டோம் – கவிஞர் வைரமுத்து பேட்டி
ஒரு நல்ல தயாரிப்பாளரை கலை உலகம் இழந்துவிட்டது. ஒரு நல்ல நண்பரை நான் இழந்து விட்டேன். கலை உலகில் படம் தயாரிப்பது என்பது அவ்வளவு எளிய பணி அல்ல. நாங்கள் எழுத வந்த காலகட்டத்தில் ஒரு படம் வெற்றி பெறுவது என்பது அபூர்வம். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தன்னுடைய தோல்விகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு நம்பிக்கையை முன்வைத்து பல படங்களை தயாரித்திருக்கிறார்.

எனக்கு அவர் மீது ஓர் அன்பு என்ன தெரியுமா அவர் எடுத்த படங்களில் பெரும்பாலான படங்கள் நானே எழுத வேண்டும் என்று ஒற்றைக் காலில் வென்றார். அவ்வளவு தமிழ் காதல் அவருக்கு நடிகர் அஜித்தை வைத்து வாலி, முகவரி, சிட்டிசன், வரலாறு, வில்லன், ஆஞ்சநேயா உட்பட்ட ஏழு படங்களை தயாரித்தார்.
அந்த ஏழு படங்களுக்கும் நானே பாட்டு எழுத வேண்டும் என்று விரும்பியதால் எழுதிக் கொடுத்தேன். அந்த காலத்தில் நட்பு தழைத்திருந்தது. ஒரு தயாரிப்பாளர் ஒரு பாடலாசிரியனை வேலை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போய் விடுவது மட்டும் ஒரு வேலை அல்ல எழுதிய வரிகளை ரசிப்பதும் அதை பாராட்டுவதும் கொண்டாடுவதும் அதை மீண்டும் மேற்கோள் காட்டுவதும் ஒரு தயாரிப்பாளருக்கு கைவந்த கலை அல்ல அந்தக் கலை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கு கைவந்திருந்தது.
ஒரு நல்ல தயாரிப்பாளரை நாம் இழந்து விட்டோம் நல்ல நண்பரை நான் இழந்துவிட்டேன் அவர் பெயரை காலம் சொல்லும் கலை சொல்லும் என்று நம்புகிறேன். அவர் இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என் இரங்கல் நண்பர்களுக்கு என் ஆறுதல் கலை உலகத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்.