Homeசெய்திகள்சினிமாசொன்ன தேதிக்கு கட்டாயம் வர்றோம்.... 'வீர தீர சூரன்' பட தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவு!

சொன்ன தேதிக்கு கட்டாயம் வர்றோம்…. ‘வீர தீர சூரன்’ பட தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவு!

-

- Advertisement -

வீர தீர சூரன் படத்தின் தயாரிப்பாளர் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.சொன்ன தேதிக்கு கட்டாயம் வர்றோம்.... 'வீர தீர சூரன்' பட தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவு!

விக்ரமின் 62 வது படமாக வீர தீர சூரன் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுப,தி சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியிருக்கிறார். ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தேனி ஈஸ்வர் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். கிராமத்து கதைக்களத்தில் ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.சொன்ன தேதிக்கு கட்டாயம் வர்றோம்.... 'வீர தீர சூரன்' பட தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவு! வீர தீர சூரன் பாகம் 2 என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்ச்ல் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும், டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தபடியாக வருகின்ற மார்ச் 20 அன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில், “மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள். மிகவும் திறமையான இயக்குனர் அருண்குமாருக்கு நன்றி. இந்த அற்புதமான படத்தை தணிக்கைக்கு அனுப்புவதற்கு முன்பாக எங்களுக்கு போட்டுக் காட்டிய மிகவும் திறமையான இயக்குனர் அருண்குமாருக்கு நன்றி.

இந்த படமானது விக்ரமின் எதார்த்தமான கல்ட் – கமர்சியல் படம். விக்ரமின் சிறந்த படங்களில் ஒன்று. மார்ச் 27ஆம் தேதி பார்வையாளர்கள் இந்த படத்தை கரகோஷம் எழுப்பி ரசிப்பதை காண காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் இப்படம் அறிவித்த தேதியில் திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சமீப காலமாக இப்படம் மார்ச் 27-இல் வெளியாகுமா? என்பது போன்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ