தமிழ் சினிமாவில் அஜித்தும், தனுஷும் முக்கியமான நடிகர்களாக வலம் வருகின்றனர். அந்த வகையில் அஜித் நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. அதை தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதேசமயம் நடிகர் தனுஷ், குபேரா, இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதில் குபேரா ஜூன் 20ஆம் தேதியும், இட்லி கடை அக்டோபர் 1ஆம் தேதியும், தேரே இஷ்க் மெய்ன் நவம்பர் 28ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் நடிகர் அஜித், தனுஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க போகிறார் என சமீபகாலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும், இந்த படம் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அஜித் தற்போது கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வரும் நிலையில் சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அப்போது அஜித்தும், தனஷும் சந்திப்பார்கள் எனவும், இருவரின் கூட்டணியில் உருவாகும் புதிய படம் தொடர்பான அப்டேட் ஏதேனும் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஜித் கார் பந்தயத்திலும், தனுஷ் தேரே இஷ்க் மெய்ன் படத்திலும் பிசியாக இருப்பதால் இவர்களின் சந்திப்பு நடக்கவில்லை என தற்போதைய தகவல்கள் இருக்கின்றன. ஆனால் இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் இவர்களின் சந்திப்பு நடைபெறலாம் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த தகவல் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளது.