சியான் விக்ரமின் 62 வது படமான வீர தீர சூரன் திரைப்படம் நேற்று (மார்ச் 27) பல தடைகளுக்குப் பிறகு மாலை 6 மணி முதல் திரையிடப்பட்டது. வீர தீர சூரன் பாகம் 2 என்ற தலைப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூலிலும் பட்டைய கிளப்பி வருகிறது. தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் இனிவரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுவிதமான இன்டர்வெல், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட கிளைமேக்ஸ், சியான், சுராஜ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரின் எதார்த்தமான நடிப்பு என எந்த ஒரு இடத்திலும் சலிப்பில்லாமல் நகர்கிறது இப்படத்தின் திரைக்கதை. இந்த படத்தின் இயக்குனர் அருண்குமார் ஆரம்பத்திலேயே இரண்டாம் பாகத்தை வெளியிடுகிறாரே. இது எப்படி? ஒர்க் அவுட் ஆகுமா? என்பது போன்ற சந்தேகங்கள் இருந்து வந்தது. ஆனால் அருண்குமார் தன்னுடைய திரைக்கதையின் மீது வைத்திருந்த நம்பிக்கையை அருமையாக தெளிவுபடுத்தி இருக்கிறார். எந்தெந்த நடிகரை எப்படி காட்டினால் ரசிகர்களுக்கு பிடிக்குமோ அதுபோல காட்டி பாராட்டுகளை பெற்றுள்ளார்.
Our Prince SK anna hugged and wished our Nadippu Sooran Chiyaan anna 💥🤩#VeeraDheeraSooran #ChiyaanVikram #Sivakarthikeyan #Chiyaan #Madharasi #Parasakthi
pic.twitter.com/llOgC6c8bs— Sundar 𓂀🦚 (@Puneeth51555) March 27, 2025
மேலும் ஜிவி பிரகாஷின், தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு ஆகியவைகளும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளன. இந்நிலையில் நேற்று மாலை இந்த படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் இணைந்து பார்க்க விக்ரம், துஷாரா ஆகியோர் சத்யம் திரையரங்கிற்கு வந்திருந்தனர். அதே சமயம் சிவகார்த்திகேயனும் திரையரங்கிற்கு வந்திருந்தார். இடைவேளையில் போது சார் சூப்பர் சார், மிரட்டிடீங்க.. என்று விக்ரமை கட்டி அணைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே சமயம் ரசிகர்களும் விக்ரமை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.