அஜித் நடிப்பில் விடாமுயற்சி எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை மீகாமன், தடம், தடையறத் தாக்க, கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய திருமேனி இயக்கி வருகிறார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். ஓம் பிரகாஷ் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஏற்கனவே கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்ற நிலையில் கிட்டத்தட்ட 70 சதவீத படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்தது. அதன் பின்னர் சிறிய இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் இதன் இறுதி கட்ட படப்படிப்புகள் அஜர்பைஜானில் தொடங்கப்பட்டு மும்மரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் விடாமுயற்சி படத்தின் முழு படப்பிடிப்புகளும் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்திற்குள் முடிவடைந்து விடும் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நேற்று (ஜூன் 30) இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் ஃபர்ஸ்ட் லுக் இல்லை என்றாலும் அஜித்தின் லுக் மாஸாக இருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். அதே சமயம் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த பின் தான் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இது தவிர இந்தியன் 2 படத்தின் ரிலீஸுக்கு பிறகு ரஜினியின் வேட்டையன், அஜித்தின் விடாமுயற்சி ஆகிய இரு படங்களின் ரிலீஸ் தேதியும் முடிவு செய்யப்படும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -