Homeசெய்திகள்சினிமாகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்.... சீசன் 8 எப்போது தொடங்குகிறது?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்…. சீசன் 8 எப்போது தொடங்குகிறது?

-

- Advertisement -

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்.... சீசன் 8 எப்போது தொடங்குகிறது?அந்த அளவிற்கு சண்டை, கலவரம், காமெடி, போட்டி என இந்நிகழ்ச்சி சுவாரசியமாக நகரும். இந்த நிகழ்ச்சியானது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் , இந்தி, கன்னடம் என பலமொழிகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகின்றனர். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களை விட இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் ஆதரவு பெரிய அளவில் இருந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அந்நிகழ்ச்சியின் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வரும். யார் என்றே தெரியாதவர்களை கூட இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் பிரபலமாக்கிவிடும்.கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்.... சீசன் 8 எப்போது தொடங்குகிறது?

தற்போது தமிழில் பிக் பாஸ் சீசன் 7 நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக விஜே அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 8 எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது இது குறித்த அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி பிக் பாஸ் சீசன் 8 2024 அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மாதங்களில் வெளியாகலாம் என்று நம்பப்படுகிறது.

MUST READ