சிம்புவின் அரசன் பட கதாநாயகி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். சிம்புவின் 49வது படம் இந்த படத்திற்கு அரசன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படமானது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வடசென்னை’ படத்தின் யுனிவர்சாக உருவாக இருக்கிறது. மேலும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகும் எனவும் பேச்சு அடிபடுகிறது. இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ். தாணுவும், அட்மேன் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சிம்புவும் இணைந்து தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அனிருத் இந்த படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றப் போகிறார் என சமீபகாலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. அடுத்தது இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்க உள்ளார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் முன்னோட்டத்தில் இது குறித்த அப்டேட் கிடைக்கும் என நம்பப்படுகிறது.