தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ஏற்கனவே ஆர்யா, ஆர்யா 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து புஷ்பா திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. எனவே அதைத் தொடர்ந்து உருவான புஷ்பா 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்த நிலையில் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வசூலிலும் அடித்து நொறுக்கியது. ஆக்சன், மாஸ், ஸ்டைல் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருந்தார் அல்லு அர்ஜுன். அதேசமயம் காத்திருந்த ரசிகர்களுக்கு தரமான விருந்து படைத்திருந்தார் இயக்குனர் சுகுமார்.
அடுத்தது அல்லு அர்ஜுன், சுகுமார் கூட்டணியில் உருவாகும் புஷ்பா 3 திரைப்படம் 2028இல் திரைக்கு வரும் என படக்குழு தரப்பில் அப்டேட் கொடுக்கப்பட்டது. அதே சமயம் புஷ்பா 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் புஷ்பா 3 படத்திற்கான லீட் கொடுக்கப்பட்டிருந்தது. எனவே அதில் வரும் நபர் யார்? என்பது போன்ற கேள்விகளும் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. அதன்படி அந்த நபர், பகத் பாசிலாக இருக்கலாம் என்றும் உயிர் தப்பி வந்து பகத் பாசில் தான் மீண்டும் பழிவாங்க போகிறார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகி வந்தது. அடுத்தது அந்த நபர் நானி அல்லது விஜய் தேவரகொண்டவாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
Dir Sukumar Recent
– There was a lead at the end of #Pushpa2, who will act in #Pushpa3?
– #Nani or #VijayDeverakonda
– 2025 Sukumar doesn’t know anything. 2026 Sukumar only knows.
pic.twitter.com/RtX1NFEr0R— Movie Tamil (@MovieTamil4) April 2, 2025
இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகுமாரிடம் கேட்டபோது, “2025 இல் இருக்கிற சுகுமாருக்கு அது தெரியாது. 2026 இல் உள்ள சுகுமாருக்கு தான் அது தெரியும்” என்று கலகலப்பான பதில் கொடுத்துள்ளார்.