Homeசெய்திகள்சினிமாஉலக அளவில் ரூ. 150 கோடியை தாண்டுமா 'டிராகன்' பட வசூல்?

உலக அளவில் ரூ. 150 கோடியை தாண்டுமா ‘டிராகன்’ பட வசூல்?

-

- Advertisement -

டிராகன் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.உலக அளவில் ரூ. 150 கோடியை தாண்டுமா 'டிராகன்' பட வசூல்?

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் டுடே திரைப்படம் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து இவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி 21 டிராகன் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்தை ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. லியோன் ஜேம்ஸ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்து இருந்தார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கல்லூரி மாணவனாக நடித்திருந்தார். அவருடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கயடு லோஹர், ஜார்ஜ் மரியான் மற்றும் பலர் நடித்திருந்தனர்.உலக அளவில் ரூ. 150 கோடியை தாண்டுமா 'டிராகன்' பட வசூல்? மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விமர்சன ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் வெளியான 10 நாட்களில் ரூ. 100 கோடியை கடந்து இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படம் தற்போது வரை ரூ. 125 கோடி வசூலை கடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இப்படம் ரூ. 150 கோடி வசூலை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ