spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎனக்கு விரைவில் திருமணம் நடக்கும்.... நடிகர் அதர்வா பேச்சு!

எனக்கு விரைவில் திருமணம் நடக்கும்…. நடிகர் அதர்வா பேச்சு!

-

- Advertisement -

நடிகர் அதர்வா தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து பரதேசி, சண்டிவீரன் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போதைய இவரது நடிப்பில் டிஎன்ஏ, நிறங்கள் மூன்று ஆகிய படங்கள் உருவாகியிருக்கின்றன. எனக்கு விரைவில் திருமணம் நடக்கும்.... நடிகர் அதர்வா பேச்சு!அதில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிறங்கள் மூன்று திரைப்படம் வருகின்ற நவம்பர் 22ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தான் நிறங்கள் மூன்று படத்தின் விழாவில் பேசிய அதர்வா படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் பார்த்ததிலிருந்தே அவருடன் பணிபுரிய வேண்டும் நினைத்துக் கொண்டிருந்தேன். அதன்பிறகு நிறங்கள் மூன்று படத்தின் கதையை கேட்டதும் எனக்கு பயமாக இருந்தது.எனக்கு விரைவில் திருமணம் நடக்கும்.... நடிகர் அதர்வா பேச்சு! என் கதாபாத்திரத்திற்கு நேர்மாறான கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்துள்ளார் கார்த்திக் நரேன். உண்மையில் இது வித்தியாசமான படம். சரத்குமார், ரஹ்மான் போன்ற சீனியர் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நிறைய புது புது விஷயங்கள் இந்த படத்தில் இருக்கின்றன” என்று பேசினார். தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு எப்போது திருமணம் என பலரும் கேட்கிறார்கள். அது விரைவில் நடக்கும்” என்று கூறினார்.

MUST READ