Homeசெய்திகள்சினிமா'பாகுபலி 2' பட சாதனையை முறியடிக்குமா 'புஷ்பா 2'.... வசூல் குறித்த புதிய அறிவிப்பு!

‘பாகுபலி 2’ பட சாதனையை முறியடிக்குமா ‘புஷ்பா 2’…. வசூல் குறித்த புதிய அறிவிப்பு!

-

- Advertisement -

புஷ்பா 2 படத்தின் வசூல் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம்தான் புஷ்பா 2. 'பாகுபலி 2' பட சாதனையை முறியடிக்குமா 'புஷ்பா 2'.... வசூல் குறித்த புதிய அறிவிப்பு!கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா பாகம் 1 திரைப்படத்தின் வெற்றியின் காரணமாக புஷ்பா பாகம் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வந்தது. அதன்படி சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அல்லு அர்ஜுன் தனது நடிப்பினால் மிரட்டி இருந்தார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் ருத்ர தாண்டவம் ஆடியிருந்தார் அல்லு அர்ஜுன். ஆக்ஷன் காட்சிகளும் மாஸ் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. எனவே இந்த படத்தினை இந்திய அளவில் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் புஷ்பா 2 திரைப்படம் வெளியான 6 நாட்களில் ஆயிரம் கோடி ரூபாயை கடந்து வெற்றி நடை போட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்களை கடந்த நிலையில் தற்போது வரை இந்த படம் ரூ. 1705 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 'பாகுபலி 2' பட சாதனையை முறியடிக்குமா 'புஷ்பா 2'.... வசூல் குறித்த புதிய அறிவிப்பு!ஏற்கனவே புஷ்பா 2 திரைப்படம் கே ஜி எஃப் 2, ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களின் வசூல் சாதனையை முறியடித்த நிலையில் அடுத்தது இந்த படம் பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை முறியடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்து வருகிறது. எனவே இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படம் 1800 கோடி ரூபாயை கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ