spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்வேப்பேரி காவல் நிலைய கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றம்…

வேப்பேரி காவல் நிலைய கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றம்…

-

- Advertisement -

வேப்பேரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி என பதிவு செய்யபட்ட வழக்கு, சிகிச்சை பெற்று வந்த பிரேம்குமார் சிகிச்சை பலனின்றி, இறந்த காரணத்தினால், மேற்படி கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வேப்பேரி காவல் நிலைய கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றம்…

சென்னை, பெரியமேடு, ஸ்டிங்கர்ஸ் தெரு குடிசைபகுதியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளாா். கடந்த 05.06.2025 அன்று அதிகாலை பிரேம்குமார் அவரது நண்பர் கபிலுடன் சேர்ந்து அதே பகுதியில் வசித்து வரும் சுமதி என்பவரின் வீட்டிற்கு சென்று மதுபாட்டில் கேட்டுள்ளனர். சுமதி மதுபாட்டில் ஏதும் என்னிடம் இல்லை என்று கூறியதால், கோபமடைந்த  பிரேம்குமார் சுமதியை அவதூறாக பேசியுள்ளார்.

we-r-hiring

உடனே சுமதி அவரது  மருமகன்  விஜயநாராயணன் மற்றும் மகன்  தீனாவிடம் நடந்த சம்பவத்தை கூறி அவர்களை  ஆட்டோவில் அழைத்து சென்று பிரேம்குமாரை அரிவாளால்  தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். பலத்த காயமடைந்த பிரேம்குமார் அருகில் இருந்தவர்களால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இது குறித்து பிரேம்குமாரின் தாய் வேப்பேரி காவல் நிலையத்தில் தனது மகனை கொலை செய்ய முயற்சி செய்ததாக புகார் கொடுத்துள்ளாா்.

வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேற்படி விசாரணையில் கொலை முயற்சியில் சம்பந்தப்பட்ட விஜய நாராயணன், ஜீவா, தீனா, கண்ணதாசன், சுமதி ஆகிய    5 நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்கு பின் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு  நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 அரிவாள்கள், 1 கார் மற்றும்  1 ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில் பிரேம்குமார் என்பவருக்கும் சுமதி மற்றும்  , பிரேம்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும், பிரேம்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜயநாராயணனை கத்தியால் தாக்கி உள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரேம்குமார் சிகிச்சை பலனின்றி, இறந்த காரணத்தினால், மேற்படி கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நித்யா கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

MUST READ