சென்னை தண்டையார்பேட்டையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் பிரபல ரவுடி பவுடர் ரவி உட்பட மூன்று பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.பவுடர் ரவி மீது இரண்டு கொலை வழக்குகள் உட்பட 62 வழக்குகள் உள்ளன.
சென்னை தண்டையார்பேட்டை காலர மருத்துவமனை அருகே கஞ்சா கொண்டு வந்து விற்பனை செய்வதாக சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இணை ஆணையர் தனிப்படை உதவி ஆய்வாளர் விஜயின் தலைமையில் போலீசார் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது பிரபல ரவுடியான பவுடர் ரவி இருசக்கர வாகனத்தில் வந்து கஞ்சாவை வாங்குவது தெரியவந்தது.அவரை மடக்கி பிடித்த தனிப்படை போலீசார் 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை செய்து கொண்டிருந்த பொழுது, பவுடர் ரவிக்கு போன் மூலம் வைசாக்கில் இருந்து கஞ்சா கொண்டு வருவதாக தகவல் வந்தது.இதனை அடுத்து எண்ணூர் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மறைந்திருந்த தனிப்படை போலீசார் சம்சுதீன் என்பவருக்கு
பிளாஸ்டிக் பகட்டில் 4 கிலோ கஞ்சாவை புலியில் மறைத்து வைத்து கொடுக்கும் போது குணா, பிரசாத் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதனையடுத்து பவுடர் ரவி, குணா, பிரசாத், சம்சுதீன் ஆகிய 4 பேரை காசிமேடு காவல் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர்.அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.