spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்உ.பி.யில் 17 வயது சிறுவன் தற்கொலை - 30 வயது பெண் கைது

உ.பி.யில் 17 வயது சிறுவன் தற்கொலை – 30 வயது பெண் கைது

-

- Advertisement -

உ.பி.யில் 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டதில் 30 வயது பெண் சைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திரப்பிரதேசம் மாநிலம், சஜஹான்பூர் பகுதியை சேர்ந்தவர் மொஹமத் உஸ்மான். இவரின் 17வயது சிறுவன் அசீம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) டெய்லர் வேலை செய்து வந்தான். அந்த கடைக்கு அருகில் வசித்து வந்த 30வயது பெண்ணான ஷீலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இருவருக்கும் கடந்த ஒருவருடமாக பழக்கம் இருந்துள்ளது. அதுவே நாளடைவில், திருமணம் மீறிய உறவாக மாறியது.

we-r-hiring

இந்த தவறான உறவை பற்றி ஷீலா வீட்டிற்கு தெரிய வந்தது, இந்த உறவு குறித்து அனைவரும் ஷீலாவை எச்சரித்துள்ளனர். இருந்தும் ஷீலா அசீமுடன் உறவை வைத்து கொண்டுள்ளார். ஏற்கனவே சீலாவிற்கு நான்கு குழைந்தைகள் உள்ளநிலையில் அசிமுடன் தொடர்பில் இருப்பது, பெருந்தவறு என பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்னர்.

இதனால் அந்த பெண் அசிமிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்தான் அசீம். என்னை நீ திருமணம் செய்துக்கொள்ளவில்லை என்றால் உன் மீது பொய் வழக்குகளை பதிவு செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் மிரண்டு போன சிறுவன்.

அவனது தோட்டத்தில் உள்ள பூச்சி மருந்தைக்குடித்து மயங்கிய நிலையில் இருந்திருக்கிறான். இதனை கண்ட அப்பகுதி மக்கள், அவனை மீட்டெடுத்து அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அசீம் உயிரிழந்தார்.அசீமின் தந்தை இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்க, ஷீலாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ