Homeசெய்திகள்க்ரைம்17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்

-

ஷேர் சாட் ஆப் மூலமாக பழக்கம் ஏற்பட்ட 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய காதலன் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுனரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

நெற்குன்றத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 24ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும், குறிப்பாக அடிக்கடி செல்போனில் ஒருவருடன் சிறுமி பேசி வந்ததை தந்தை கண்டித்ததால் கோபித்து கொண்டு வெளியே சென்றதாகவும் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த போது, சிறுமியின் காதலன் போன் செய்து தன்னுடன் தான் சிறுமி இருப்பதாக போனில் பேசி மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து காதலன் பேசிய செல்போன் எண்ணை வைத்து ட்ராக் செய்யும் போது பெங்களூருவில் காண்பித்த நிலையில் அங்கு சென்ற போலீசார் சிறுமி மற்றும் சிறுமியின் காதலனை பிடித்துள்ளனர்.

பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக ஷேர் சாட் மூலமாக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏற்கனவே திருமணம் ஆகி பிரிந்து வாழும் விக்னேஷ்(26) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் காதலிப்பதாக கூறி சிறுமியை ஏமாற்றிய விக்னேஷ் திருவண்ணாமலைக்கு கிளம்பி வருமாறு சிறுமியிடம் கூறியுள்ளார் அதன் பெயரில் வீட்டிலிருந்து கிளம்பிய சிறுமி கோயம்பேடு மார்க்கெட் அருகே திருவண்ணாமலைக்கு எப்படி செல்ல வேண்டும் என ஆட்டோ ஓட்டுனர் ராதாகிருஷ்ணன் என்பவரிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ஆட்டோ ஓட்டுனர் தானும் திருவண்ணாமலை தான் செல்வதாக கூறி சிறுமியை பேருந்து மூலமாக அழைத்து வந்துள்ளார். அப்போது பேருந்தில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஆட்டோ ஓட்டுனர் ராதாகிருஷ்ணன் ஈடுபட்டதாக சிறுமி வாக்கு மூலம் அளித்துள்ளார். இதனை அடுத்து சிறுமியை திருவண்ணாமலையில் விட்ட பின்பு அவரது காதலன் மும்பைக்கு அழைத்துச் செல்லும் போது பெங்களூருவில் போலீசார் இடம் சிக்கியது தெரிய வந்தது.

போரூர் அருகே பெண்ணை கட்டிப்போட்டு மயக்க ஸ்பிரே அடித்து 25 பவுன் நகை கொள்ளை

இதனையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுனர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (46) மற்றும் சிறுமியை ஏமாற்றிய விக்னேஷ் ஆகிய இருவரையும் கோயம்பேடு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பின்னர் சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளனர்.

MUST READ