Homeசெய்திகள்க்ரைம்மதுராந்தகம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி...

மதுராந்தகம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை…!!

-

- Advertisement -
kadalkanni

மதுராந்தகம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை சம்பவம் குறித்து அப்பகுதிமக்கள் இங்கு  இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடாததால் தொடர்ந்து இதுபோல் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருவதாக வேதனையுடன்  தெரிவிக்கின்றனர்.மதுராந்தகம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை...!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி பகுதியை சேர்ந்தவர் மேகநாதன் இவர் மதுராந்தகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் செய்தும் மாடுகளை வளர்த்து பால் கறந்தும் விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு அவரது மகளுக்கு வயிற்று வலி காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக குடும்பத்துடன் சென்று இருக்கின்றனர்.

பின்பு இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தத நிலையில் மேகநாதன் அதிர்ச்சி அடைந்தார். பின்பு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து 40 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

பின்பு திருட்டு சம்பவம் குறித்து மேகநாதன் மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தடைய நிபுணர்களை வரவழைத்து வீட்டில் தடயம் சேகரித்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்..!!

மதுராந்தகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடாததால் தொடர் குற்ற சம்பவங்கள் மற்றும் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்..!!

மயக்கும் இளம்பெண்கள் வீடியோ… 45 நிமிட மசாஜ்: பணக்காரர்கள் மட்டுமே டார்க்கெட்

MUST READ