spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்140 க்கும் மேற்பட்ட கொள்ளையில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கூட்டாளியுடன் கைது

140 க்கும் மேற்பட்ட கொள்ளையில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கூட்டாளியுடன் கைது

-

- Advertisement -

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கத்தில் கடந்த மாதம் 29 ந் தேதி சிதம்பரம் என்பவரின் வீட்டில், பெட்டகம் மற்றும் பீரோவை உடைத்து 49 பவுன் தங்க நகைகள் மற்றும் 22 கிலோ 800 கிராம் வெள்ளி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது  திருக்கோஷ்டியூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனா்.140 க்கும் மேற்பட்ட கொள்ளையில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கூட்டாளியுடன் கைது

குற்றவாளிகளை பிடிப்பதற்காக இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை  தேடிவந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தென்மாபட்டு பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை பிடித்து விசாரணை செய்ததில்  தேனியைச் சேர்ந்த  சோனிராஜா (58), மற்றும் மதுரை செக்கானூரணியைச் சேர்ந்த  அழகர்சாமி (35) என தெரிய வந்தது இங்கு எதற்காக வந்தார்கள் என்று தனிதனியே  காவல்துறையினர் விசாரணை செய்த பொழுது.  அவர்கள் முன்னுக்கு பின் பேசியதால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை செய்ததில் இவர்கள் இருவரும்  கண்டரமாணிக்கத்தில் சிதம்பரம் என்பவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து   43 பவுன் தங்க நகைகள் மற்றும் 15 கிலோ வெள்ளி பொருட்கள், ரூபாய் 65 ஆயிரம் பணம், ஆகியவற்றை திருடியதில் கைப்பற்றப்பட்டது பிரபல கொள்ளையன் சோனி ராஜா என தெரிய வந்தது இவன் மீது கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் 140 – வழக்குகளும் உள்ளது  ஒரு வீட்டில் திருட்டில் ஈடுபடுவதற்கு வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே எடுத்து  செட்டிநாட்டு பெட்டக லாக்கரை  உடைப்பதில்  சோனிராஜா வல்லவர் எனவும் கொள்ளையடித்து செல்லும் இடத்தில் ஏழ்மையான இளைஞர் ஒருவரை  தனது  நண்பராக ஆக்கிக் கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் எனவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

ஆம்புலன்சை தடுத்த இளைஞர்: ரூ.2.5 லட்சம் அபராதம்

we-r-hiring

MUST READ