கோவை மத்திய சிறையில் தனிமனித சுதந்திரம் பறிக்கப்பட்டதாக கூறி மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த அனூப் என்பவர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கோவை கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 2015-ல் மாவோஸ்ட் அமைப்பை சேர்ந்த ரூபேஷ், சைனா , அனூப் உள்ளிட்ட 5 பேரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்கள் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பதும், பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
காவலரை கத்தியால் தாக்கிய பிரபல ரவுடி…. சுட்டு பிடித்த காவல் ஆய்வாளார்
இதில் அனூப் கோவை மத்திய சிறையில் உள்ள தனி பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் உள்ள அனூப்பின் புத்தகம் உள்ளிட்ட உடமைகளை சிறை அதிகாரிகள் வீசியதாகவும், இங்கு தனி மனித சுதந்திரம் பாதிக்கபடுவதாகவும், இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அனூப் சிறை வளாகத்தில் உணவு எடுத்துக் கொள்ளாமல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்த தகவலை அவரது வழக்கறிஞர் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.