பெங்களூருவிலிருந்து நெல்லை வழியாக ரயிலில் மது பாட்டில்கள், குட்கா கடத்திய மூவரை போலீஸார் கைது செய்தனர்.பெங்களூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் பெங்களூருவிலிருந்து பயணிகளுடன் புறப்பட்டது. ரயில் நேற்று அதிகாலை நெல்லை ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்து கொண்டிருந்தது. அப்பொழுது நெல்லை ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரயிலில் சோதனையில் ஈடுபட்டனர். போலீசார் சோதனை செய்த போது, அதில் வெளிமாநில மது பாட்டில்கள், குட்காவை முன் பதிவில்லா பெட்டியில் 3 பேர் கடத்தி வந்தது தெரிந்தது.
போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்திய நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் வயது (38), இவர் 20 சிறிய அளவிலான மது பாக்கெட்டுகளை கடத்தி வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை கீழ கல் குறிச்சி பகுதியைச் சேர்ந்த சச்சின் (21), இவர் 10 வெளி மாநில மது பாட்டில்களை கடத்தி வந்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த முத்துராமன் வயது (34), இவர் குட்கா பொருட்களை கடத்தி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிந்தது. போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்ததை தொடர்ந்து, அவர்களிடமிருந்த மது பாட்டில்கள், குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
- Advertisement -