- Advertisement -
கள்ளக்காதலால் விபரீதம்- இளம் பெண் அடித்துக் கொலை
இராமநாதபுரம் அருகே தந்தையை கொலை செய்த பெண் ஒரு வருடத்திற்கு பின் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் அருகே காவனூர் ஆசாரி மடத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கு திருமணமாகி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பவித்ரா தனது தாய் பாக்கியத்தின் உதவியுடன் இடையர் வலசையைச் சேர்ந்த டிரைவர் ஒருவருடன் கள்ள காதல் செய்து பழகி வந்துள்ளது தெரிந்ததால் கணவர் பிரிந்து சென்றார். கள்ள காதலை தந்தை ரவி கண்டித்ததால் கடும் கோபமடைந்த தாயும், மகளும் கடந்தாண்டு மார்ச் மாதம் ரவி இரவில் வீட்டில் தூங்கிய போது வீட்டை பூட்டி விட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தனர்.இந்த கொலை வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமின் பெற்ற பாக்கியம், பவித்ரா மற்றும் அவரது குழந்தைகள் ரவியை கொலை செய்த அதே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொத்தனார் ஒருவருடன் பவித்ராவிற்கு காதல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தந்தையை கொலை செய்ததால் தந்தையின் உறவினர்கள் கடும் கோபத்தில் இருந்த நிலையில், புதிய காதல் மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


