தமிழகத்தை உலுக்கிய பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப்பத்திரிக்கையை எழும்பூர் நீதிமன்றத்தில்
தாக்கல் செய்துள்ளது சென்னை காவல்துறை.
ஐந்தாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் 750 ஆவணங்கள் இணைக்கப்பட்டு இருப்பதாக தகவல்.
ஏ1 குற்றவாளியாக நாகேந்திரனை குற்றப்பத்திரிக்கையில் சேர்த்துள்ளது சென்னை காவல்துறை.
கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், சென்னை காவல்துறை தனிப்படை அமைத்து தீவிரமாக குற்றவாளியை தேடி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மொத்தம் 28 நபர்களை சென்னை காவல்துறையினர் இதுவரை கைது செய்துள்ளனர். மேலும் இவ் வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் முக்கிய ரவுடியான சம்போ செந்தில் மற்றும் அவரது கூட்டாளி மொட்டை கிருஷ்ணனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கையை எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீசார் தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக மூன்று மாதத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருந்து வரும் நிலையில் மூன்று மாதத்திற்கு முன்னதாகவே குற்றப்பத்திரிக்கையை சென்னை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர். ஐந்தாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில் வழக்கு தொடர்பான 750 ஆவணங்களை இணைத்து இருப்பதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ ஒன் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரன், ஏ2 குற்றவாளியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்தில், ஏ 3 குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் சேர்க்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆம்ஸ்ட்ராங் கொலையானது ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே நடந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதன் பின்னர் ஸ்கிராப் பிசினஸ், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சனையின் காரணமாக சென்னையில் உள்ள பல ரவுடிகள் இணைந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ரவுடி நாகேந்திரன் சிறைக்குள்ளே இருந்து ஸ்கெட்ச் போட்டு ஒருங்கிணைத்து கொலை செய்திருப்பதும், இதற்கு உடந்தையாக சம்போ செந்தில் இருப்பதும், கட்டப்பஞ்சாயத்து தொழிலுக்கு தடையாக இருந்த நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் பணஉதவி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மது பழக்கத்தினால் அழிந்துவரும் இந்துக்கள்; காப்பாற்றுவாரா பிரதமர்?- திருமாவளவன்
ஆம்ஸ்ட்ராங் கொலையை எப்படி அரங்கேற்றினார்கள்? கைது செய்யப்பட்டுள்ள 28 நபரின் ரோல்கள் என்ன என்ற முழு விவரங்களையும் குற்றப்பத்திரிக்கையில் போலீசார் இணைத்திருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் ரவுடி சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தேடப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நபர்களின் சொத்துக்கள், செல்போன்கள், ஆயுதங்கள் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.