12ம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் குற்றவாளி கைது! ஓரினச்சேர்க்கையால் விபரீதம்
கடலூரில் பள்ளிக்கூடம் செல்ல பேருந்து நிலையத்தில் மாணவன் நின்றுகொண்டு இருந்த 12 ஆம் வகுப்பு மாணவன் மர்மநபர்களால் குத்தப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த ஸ்ரீ முஷ்ணம் அருகே மேல் புளியுங்குடியை கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி மகன் ஜீவா வயது (17). இவர் விருத்தாசலம் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் மேல் புளியங்குடி பேருந்து நிலையத்தில் பள்ளிக்கு செல்வதற்கு காத்திருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணிய மகன் ஆனந்த் (வயது 22). இவர் ஜீவாவிடம் தனியா பேசுவதாக கூறி அழைத்துச் சென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

அருகில் இருந்தவர்கள் ஜீவாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார். உடனடியாக108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், சென்னை, தாம்பரத்தில் குற்றவாளி ஆனந்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மொட்டை அடித்து மாறுவேடத்தில் சுற்றித்திரிந்த ஆனந்தை போலீசார் சுற்றுவளைத்தனர். ஓரினச்சேர்க்கை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.