Homeசெய்திகள்க்ரைம்கொலை நடந்த இடத்திற்கு நடிகர் தர்ஷன் - காதலி பவித்ரா கவுடாவை அழைத்து சென்று விசாரணை

கொலை நடந்த இடத்திற்கு நடிகர் தர்ஷன் – காதலி பவித்ரா கவுடாவை அழைத்து சென்று விசாரணை

-

- Advertisement -

பெங்களூரில் கொலை நடந்த இடத்திற்கு நடிகர் தர்ஷன் மற்றும் அவரது காதலி பவித்ரா கவுடாவை அழைத்து சென்று காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை நடந்த இடத்திற்கு நடிகர் தர்ஷன் - காதலி பவித்ரா கவுடாவை அழைத்து சென்று விசாரணை

பெங்களூரு நகரில் கடந்த 9 ஆம் தேதி ரேணுகா சுவாமி என்பவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கன்னட முன்னணி நடிகர் தர்ஷன் அவரது காதலி பவித்ரா கவுடா உள்ளிட்ட 13 நபர்கள் கைது செய்யப்பட்டு தற்பொழுது போலீஸ் காவலில் உள்ளனர்.

கொலை நடந்த இடத்திற்கு நடிகர் தர்ஷன் - காதலி பவித்ரா கவுடாவை அழைத்து சென்று விசாரணை

போலீஸ் காவலில் உள்ள 13 நபர்களையும் இன்று போலீசார் கொலை நடந்ததாக கூறப்படும் பட்டனகரே என்ற பகுதியில் உள்ள கார் செட்டிற்கு அழைத்து சென்று சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். குற்றம் நடந்த இடத்தில் வைத்து குற்றம் எவ்வாறு நடந்தது யார் யார் கொலை செய்தது? யார் யார் உடந்தையாக இருந்தது? போன்ற அனைத்து சாட்சிகளையும் சம்பவ இடத்தில் குற்றவாளிகளிடம் காவல் துறையினர் வாக்கு மூலமாக பெற்றுள்ளனர்.

நடிகர் தர்ஷன் ரசிகர்கள் காவல் நிலையத்தை முற்றுகை – போலீசார் தடியடி (apcnewstamil.com)

 

களத்தில் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்ட பிறகு மீண்டும் பெங்களூரு நகரில் உள்ள அன்னபூர்ணேஸ்வரி காவல் நிலையத்திற்கு குற்றவாளிகள் அனைவரையும் காவல்துறையினர் அழைத்துச் சென்று மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர்.

MUST READ