- Advertisement -
ரியல் எஸ்டேட் அதிபரும், அழகப்பனையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு.
நடிகை கவுதமி நில அபகரிப்பு மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபரும், பாஜக பிரமுகருமான அழகப்பன் மீதும் புகார் அளிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த 21 ம்தேதி அழகப்பன், அவருடைய மனைவி நாச்சியாள், மகன் சிவ அழகப்பன், மருமகள் ஆர்த்தி, டிரைவர் சதீஷ் ஆகியோர் கேரள மாநிலம் திரிச்சூர் அருகே உள்ள கிராமத்தில் பதுங்கி இருப்பதை அறிந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் அழகப்பனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்ககோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாளை மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.