மதுராந்தகம் அருகே பட்டப்பகலில் வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற மூன்று பேரில் இருவர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு ஒருவர் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட்டம்!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் பகுதியைச் சார்ந்தவர் சலவை தொழிலாளியான பார்த்தசாரதி வயல்வெளியில் விவசாய பணி முடிந்து வீடு திரும்பிய பொழுது வீட்டின் முன்பு ஒரு வாலிபரும் வீட்டின் உள்ளே இரண்டு வாலிபர்களும் இருந்துள்ளனர்.
இதை அடுத்து பார்த்தசாரதி வருவதை கண்ட வெளியே இருந்த வாலிபர் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்று தப்பி ஓடி உள்ளார். வீட்டின் உள்ளே இருந்த இரண்டு வாலிபர்கள் வீட்டின் பின்பக்க வழியாக சென்று அருகில் இருந்த ஏரியில் தண்ணீரில் பதுங்கி உள்ளனர்.
இதை எடுத்து அப்பகுதி பொதுமக்கள் ஏரியில் ட்ரோன் காட்சி மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். பிறகு ஏரியில் உள்ள புதூரில் மறைந்திருந்த இருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதில் சென்னை மடிப்பாக்கம் பல்லாவரம் பகுதி சேர்ந்த சஞ்சய் மற்றும் ஜான்சன் இருவர் என தெரிய வந்தது. தப்பி ஓடிய இளைஞர் யார் என்பது குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.