spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சீர்காழி அருகே சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை!

சீர்காழி அருகே சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை!

-

- Advertisement -
kadalkanni

சீர்காழி அருகே சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 120 பவுன் நகை மற்றும் 80 ஆயிரம் பணம் அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு.

சீர்காழி அருகே சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை!மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வேந்திரன் இவர் சர்க்கரை ஆலையில பணியாற்றி வருகிறார். இவரது மகளின் பிரசவத்திற்காக கடந்த திங்கட்கிழமை அன்று மயிலாடுதுறை உள்ள மருத்துவமனைக்கு சென்று பிரசவம் முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கொள்ளை பக்கம் கதவு கடப்பாரையால் உடைக்கப்பட்டு அறைகளிலிருந்த பீரோ மற்றும் சூட்கேஸ் உடைத்து அதில் இருந்த 120 பவுன் நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருள் மற்றும் ரூபாய் 80 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபருக்கு கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கடந்த வாரம் மேலச்சாலை உள்ள இந்தியன் வங்கி கிளையின் ஏ.டி.எம்மை உடைத்து சுமார் ரூபாய் 6 லட்சம் பணத்தை திருடிய சென்ற நிலையில் அதனை தொடந்து இந்த திருட்டு சம்பவத்தால் சீர்காழி சுற்றுவட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

MUST READ