spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஆப்பிள் ஐ -பேடு, இயர் பட்ஸ் திருடர்: கிளவுட் தொழில் நுட்பத்தில் கொத்தாக தூக்கிய ...

ஆப்பிள் ஐ -பேடு, இயர் பட்ஸ் திருடர்: கிளவுட் தொழில் நுட்பத்தில் கொத்தாக தூக்கிய ரயில்வே போலீஸ்..!

-

- Advertisement -

எழும்பூர் வந்த ரயிலில் இருந்து ஆப்பிள் ஐ பேடு, இயர் பட்ஸ் திருடி சென்ற நபரை கிளவுட் தொழில் நுட்பம் மூலம், இரண்டு நாள் கொக்கு போல் காத்திருந்து எழும்பூர் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

ஐ டி நிறுவனத்தில் வேளை பார்த்து கொண்டு அண்ணாநகரில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ் கோச்சிங் மையத்தில் படித்து வருபவர் மதுரையை சேர்ந்த முகமது யூசுப். கடந்த 23 ந் தேதி மதுரையில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த முகமது யூசுப் என்பவரின் விலை உயர்ந்த ஆப்பிள் ஐ பேடு, இயர் பட்ஸ் திடீரென காணாமல் போனது.

we-r-hiring

இது குறித்து, எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்த முகமது யூசுப். ஆப்பிள் செல் போனுடன் கனெக்ட் செய்யப்பட்டு இருந்த ஐ பேடு சிக்னல் கிடைத்தால் தகவல் தெரிவித்தால்., கண்டு பிடிக்க உதவியாக இருக்கும் என ரயில்வே போலீசார் அறிவுரை கூறியிருந்தனர்.

ஆப்பிள் ஐ -பேடு, இயர் பட்ஸ் திருடர்: கிளவுட் தொழில் நுட்பத்தில் கொத்தாக தூக்கிய ரயில்வே போலீஸ்..!இரண்டு நாள் கழித்து ஆப்பிள் ஐ பேடு, இயர் பட்ஸ் சிக்னலானது 25 ம் தேதி எழும்பூர் ரயில் நிலையத்தில் இருக்கும் சிக்னல் கிடைக்கவே, புகார் தாரரான முகமது யூசுப் எழும்பூர் ரயில் நிலையம் வந்தவரின் ஆப்பிள் போன் எண்ணை சைபர் கிரைம் உதவிடன் இணைத்து தேடிய போது., நடைமேடையில் சந்தேகத்துடன் நின்றிருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது., திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த 50 வயதான கண்ணன் எப்பவரை எழும்பூர் ரயில்வே போலிசார் கைது செய்து, திருடிய நபரிடம் இருந்து ஆப்புள் ஐ பேடு, இயர் பட்ஸை பறிமுதல் செய்தபோது., திருமணம் ஆகாமல் ஒண்டி கட்டையாக வாழ்க்கையை நகர்த்தி வரும் கண்ணன், பையில் இருந்த ஐ பேடை திருடி சென்றதாக வாக்குமூலம் அளித்ததின் பேரில், கைது செய்யப்பட்ட கண்ணன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

MUST READ