பட்டினப்பாக்கத்தில் மாமூல் வசூல் செய்த்துடன், அந்த பகுதி மக்களை மிரட்டியதாக வந்த புகாரின் பேரில் மாட்டு ராஜா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
வடபழனியை சேர்ந்த ராஜா என்கிற மாட்டு ராஜா 42 என்பவர் மீது கடந்த 2021 ஆம் ஆண்டு பட்டினம் பாக்கத்தில் சிவா என்பவரை கொலை செய்த வழக்கு உட்பட இரண்டு கொலை வழக்குகள் , அடிதடி வழக்குகள் என பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு நாட்டு வெடிகுண்டு சப்ளை செய்தது தொடர்பாக ரவுடி புதூர் அப்புவை தேடி வருகின்றனர். தற்போது கைதான ரவுடி மாட்டு ராஜா, ரவுடி புதூர் அப்புவின் நெருங்கிய கூட்டாளி ஆவார். அப்புவின் பெயரை தனது கையில் பச்சை குத்தி உள்ளார்.
புதூர் அப்பு பதுங்கி இருக்கும் இடம் தெரியுமா? என ரவுடி மாட்டு ராஜாவிடம் பட்டினம்பாக்கம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.