spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ரூ.2.38 கோடி மோசடி செய்த வங்கி நகைமதிப்பீட்டாளர்!

ரூ.2.38 கோடி மோசடி செய்த வங்கி நகைமதிப்பீட்டாளர்!

-

- Advertisement -

போலியான தங்க நகைகளுக்கு கடன் கொடுத்து வங்கியை ஏமாற்றி ரூ.2.38 கோடி  மோசடி செய்த  இருவர் கைது செய்யப்பட்டனா்.ரூ.2.38 கோடி மோசடி செய்த வங்கி  நகைமதிப்பீட்டாளர்!எடுப்பலபட்டி விஜய சங்கர், துணை மேலாளர் (கனரா வங்கி, மிண்ட் கிளை, அண்ணாசாலை) என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரில் மேற்படி வங்கியில் வங்கியின் நடைமுறைப்படி internal Audit பார்க்கும் போது வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றிருந்த 21 தங்க நகை கடன் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் அனைத்தும் போலியானவை என தெரிய வந்ததாகவும், வங்கியில் பணிபுரிந்து வந்த ரமேஷ் மல்லுகுண்டா, வங்கி மேலாளர் என்பவர்தான் மேற்படி தங்க நகைகடன்களை வழங்கியதாகவும், கடன்களுக்குண்டான நகைகளுக்கு பாதுகாவலராகவும் இருந்து வந்துள்ளார் எனவும், மேற்படி வங்கியில் Audit செய்து கொண்டிருக்கும் போது வங்கி மேலாளர் ரமேஷ் மல்லுகுண்டா என்பவர் எந்தவித முன்னறிவிப்புமின்றி,

கடந்த 01.04.2025 அன்று பிற்பகல் 15.37 மணிக்கு வங்கியை விட்டு வெளியேறிவிட்டதாகவும், மேற்படி தங்க கடன்களுக்கான நகைகள் அனைத்தையும் வங்கியின் Gold Appraiser ஆன  சரவணன் என்பவரிடம்  அக்டோபர் 2024 முதல் மார்ச் 2025 வரை Gold Jewel மதிப்பீட்டு அறிக்கை பெறப்பட்டு 21 தங்க நகைகடன்கள் வழங்கியுள்ளதாகவும், அதன் பின்னர் வங்கியில் Re- Appraiser Report மூலம் அந்த தங்கநகைகள் அனைத்தும் போலியானவை என உறுதியானதாகவும், கடந்த 02.04.2025-ம் தேதி வங்கியிலிருந்து Regional Office, Canara Bank Appraiser  ஆன சரவணனை விசாரணை செய்ததில் வங்கி மேலாளர்தான் அவருக்கு தெரிந்த 21 வாடிக்கையாளர்களை வங்கிக்கு வரவழைத்து தங்கநகை கடன் வழங்கியுள்ளார் எனவும் அவர் அறிவுறுத்தியதால் தான் மதிப்பீட்டு அறிக்கை வழங்கியதாக தெரிவித்ததாகவும், ஆகவே வங்கியில் அடமானமாக வைக்கப்பட்டிருந்த Original தங்கநகைகளை எடுத்து போலியான கவரிங் நகைகளை வங்கியில் வைத்து வங்கிக்கு ரூ.2.38 கோடி இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது.

we-r-hiring

வங்கியை ஏமாற்றிய வங்கி மேலாளர், வங்கியின் Appraiser ஆன சரவணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் செய்ததின் பேரில்  சென்னை பெருநகர  காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப அவர்கள் உரிய விசாரணை செய்து  எதிரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவிற்கு உத்தரவிட்டதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு   பிரிவில் (Bank Fraud Investigation Team) வழக்கு பதிவு செய்யப்பட்டது. மத்தியகுற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையாளர், திருமதி.A.ராதிகா, இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதலின்பேரில் மத்திய குற்றப்பிரிவு வங்கிமோசடி புலனாய்வு பிரிவு காவல் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில், எதிரி Original தங்க நகைகளை வங்கியில் வைத்து கடன் பெறுவது போல் காண்பித்து போலியான தங்க நகைகளை வங்கியில் அடமானமாக வைத்து வங்கியை ஏமாற்றும் நோக்கில் வங்கியில் போலியான நகைகளை வைத்து நகைகடன் பெற்று வங்கிக்கு ரூ.2.38 கோடி இழப்பு ஏற்படுத்தியது தெரிய வந்தது.

அதன்பேரில், மேற்படி மோசடியில் ஈடுபட்ட 1. சரவணன், (42), சிந்தாதிரி பேட்டை, சென்னை-600002 மற்றும் வங்கியில் தங்க நகை வைக்காமல், தங்க நகைக்கடன் பெற்ற 2. ஜானகிராமன் (39), ஆலந்தூர் ரோடு, சைதாப்பேட்டை சென்னை-15 ஆகியோரை நேற்று (06.08.2025) கைது செய்து விசாரணைக்கு பின்னர் கூடுதல் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எழும்பூரில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேற்படி மோசடி நபரை கைது செய்த வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆணையாளா்களை சென்னை பெருநகர காவல் உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

தமிழகத்திற்கு தனித்துவ மாநிலக் கல்வி கொள்கை…நாளை முதல்வர் வெளியீடு…

MUST READ