spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்அழகு நிலையம் அமைத்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம்; ஆசையில் கவிழ்ந்த தொழிலதிபர்

அழகு நிலையம் அமைத்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம்; ஆசையில் கவிழ்ந்த தொழிலதிபர்

-

- Advertisement -

கேரளாவில் அழகு நிலையம் ஆரம்பித்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி கும்பகோணத்தைச் சேர்ந்த வாலிபரிடம் ஒரு கோடியே 21 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் மாய மாகியுள்ளார்.


கும்பகோணத்தைச் சேர்ந்த பஷீர் அகமது என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நான் பக்ரைன் நாட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தேன். அங்கே அருகில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றிய கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த வினி என்கிற ஏஞ்சல் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

we-r-hiring

அந்தப் பெண் கேரளாவில் பியூட்டி பார்லர் தொழில் தொடங்க உள்ளதாகவும் அதில் அதிக வருமானம் வரும் என்றும் அந்த தொழிலில் என்னை முதலீடு செய்ய சொன்னார். அதனை நம்பி நான் வங்கி மூலமாகவும் , நேரடியாகவும் பணம் மற்றும் தங்க நகைகள் என ஒரு கோடியே 21 லட்சம் ரூபாய் கொடுத்திருந்தேன். தொழிலில் வரும் லாபத்தை எனக்கு தருவதாக உறுதியளித்திருந்தார்.

நான் வழங்கிய பணம் மற்றும் அதற்கான லாபம் குறித்து அந்த பெண்ணிடம் பலமுறை கேட்டும் தராமல் இழுத்தடித்து வந்தார். கடந்த மாதம் அவரை நேரில் சந்திக்க அவரது சொந்த ஊரான கேரளா மாநிலம் கொல்லம் பகுதிக்கு சென்றபோது அவர் அங்கு இல்லை. மேலும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்த போது அந்த பெண் என்னைப் போன்று பல பேரிடம் தொழில் தொடங்குவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.

இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்திருந்தேன். ஆனால் போலீசார் இதுவரை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. எனவே என்னை மோசடி செய்த பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். எனது பணத்தையும் மீட்டு தர உதவிட வேண்டுமென்று மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது, விசாரணை செய்த நீதிபதி பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரியின் அடிப்படையில்
காவல் ஆய்வாளர் விசாரணை செய்து இரண்டு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

MUST READ