Homeசெய்திகள்க்ரைம்‘உன் காதலி எனக்கு... என் மனைவி உனக்கு’ நட்பு, காதல், செக்ஸ்... கேவலமான விளையாட்டில் சிக்கிய...

‘உன் காதலி எனக்கு… என் மனைவி உனக்கு’ நட்பு, காதல், செக்ஸ்… கேவலமான விளையாட்டில் சிக்கிய இளைஞர்கள்

-

- Advertisement -

”என்ன ஒரு ஆனந்தம்… இது இன்பமான வேடிக்கை. வித்தியாசமான அனுபவம். விதவிதமாக சந்தோஷமாக இருக்கலாம். முயற்சி செய்து பாருங்கள்…’’ என சிற்றின்ப பரவசத்தை ரசனை சொட்ட சொல்லி இருக்கிறார் ஒரு பெண்ணின் காதலன். புனித காதலன் அல்ல. அந்நிய காதலன்… தன் காதலியை மற்றொருவருக்கு விருந்து கொடுத்த வில்லங்க காதலன்.

தனது காதலன் அவரது மனைவி, காதலியை மற்றவர்களுடன் சிற்றின்பம் அனுபவிக்க வற்புறுத்துபவர் என்பதை அறிந்ததும் இளம்பெண் அதிர்ச்சியடைந்தார். அடுத்தவருடன் காதலியை மாற்றிக் கொள்வதில் சம்பந்தப்பட்ட பெண் மறுத்ததால், அவரது காதலன் அவரை மிரட்டத் தொடங்குவார்.

இந்த கும்பலில் சிக்கிய இளம்பெண் கர்நாடக காவல்துறையின் உதவி நாடியுள்ளார். அதன் பிறகே இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர், தங்கள் தனிப்பட்ட புகைப்படங்களை காட்டி பெண்களை ‘உன் காதலி எனக்கு… என் மனைவி உனக்கு’என பண்டமாற்று தொழிலுக்கு மிரட்டி வந்த இருவரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 30 வயதுடைய ஹரிஷ். ஹேமந்த். அந்த இருவரும் அத்திபெலேவில் வசிப்பவர்கள். இருவரும் பட்டதாரிகள். தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.

பெங்களூருவை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் சமீபத்தில்மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஹரிஷ் தன்னுடன் நட்போடு பழகியதாகவும், நட்பு காதலாக மாறியது. பின்னர் அந்த இளைஞன் அந்தப் பெண்ணுடன் பலமுறை உடல் ரீதியாக பயன் படுத்திக் கொண்டுள்ளான்.

பல பார்ட்டிகளுக்கு ஒன்றாகச் சென்றுள்ளனர். இருவரும் ஒன்றாக பின்னிப்பிணைந்திருந்த அவர்களின் அந்தரங்க தருணங்களை ஹரிஷ் அந்தப்பெணுக்கு தெரியாமல் ரகசியமாக வீடியோ பதிவு செய்துள்ளான்.

அந்த, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் காட்டி மிரட்டி தனது நண்பன் ஹேமந்துடன் படுக்கைக்கு இணங்குமாறு மிரட்டியதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். அதேபோல் ஹேமந்த் அவனது காதலியை ஹரிஷுக்கு பகிர்ந்துள்ளான்

ஹரிஷ், ஹேமந்த் இருவரும் ஹரிஷின் காதலியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் ஒரு பார்ட்டியில் சந்தித்த மற்றொரு நண்பருடன் உடலுறவு கொள்ள ஹரிஷ் அவளை வற்புறுத்தியுள்ளான். அதனை விரும்பாத அந்தப்பெண் வெடித்துக் கிளம்பி புகார் அளிக்கும் முடிவுக்கு வந்துள்ளார். போலீசார் அந்த இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்கள் இருவரின் செல்போனிலும் பல பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் கிடைத்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண்களை பற்றி விசாரித்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான கூடுதல் விவரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

MUST READ