ஊராட்சி மன்ற பெண் வார்டு உறுப்பினரை செருப்பை கொண்டு தாக்க முயன்ற விவகாரம் ஊராட்சி மன்ற தலைவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளம்புத்தூர் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த பெண் வார்டு உறுப்பினர் அஞ்சுகம் இவர் பஞ்சாயத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவு மாவட்ட ஆட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு புகார் மனு அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஊராட்சி மன்ற தலைவர் சரவணனுக்கும் வார்டு உறுப்பினர் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்த நிலையில் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் நேற்று வார்டு உறுப்பினர் வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது இருவருக்கும் ஏற்பட்ட வார்த்தை போரில் காலணியால் கழட்டி தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது,
வார்டு உறுப்பினர் அஞ்சுகம் அரகண்டநல்லூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அரகண்டநல்லூர் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் மீது பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,