Homeசெய்திகள்க்ரைம்நடுவானில் பறந்த விமானத்தில் பெண் பயணியிடம் சில்மிஷம் - சென்னை பயணி கைது…!

நடுவானில் பறந்த விமானத்தில் பெண் பயணியிடம் சில்மிஷம் – சென்னை பயணி கைது…!

-

நடுவானில் பறந்த விமானத்தில் பெண் பயணியிடம் சில்மிஷம் - சென்னை பயணி கைது…!டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த  இண்டிகோ ஏர்லைன்ஸ்  பயணிகள் விமானம், நடு வானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்துக்குள், முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட  ஆண் பயணி சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைப்பு.

விமான நிலைய போலீசார் ஆண் பயணியை கைது செய்து மேலும் விசாரணை.

நடுவானில் பறந்த விமானத்தில் பெண் பயணியிடம் சில்மிஷம் - சென்னை பயணி கைது…!டெல்லியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ்  பயணிகள் விமானம் நேற்று, 164 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது,  விமானத்தில் பயணித்த, சென்னை வெட்டுவாங்கேணிச் சேர்ந்த ராஜேஷ் (43), என்பவர் தனது இருக்கைக்கு முன் இருக்கையில்  அமர்ந்திருந்த சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த, 37 வயது பெண் பயணியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அந்தப் பெண் பயணி, விமானத்திற்குள் கூச்சலிட்டு, விமான பணிப்பெண்ணிடம் புகார் தெரிவித்தார்.

சென்னையில் மலேசியா ஏர்லைன்ஸ் இன்ஜின் பழுது; 168 பயணிகள் தவிப்பு

இதை அடுத்து விமான பணிப்பெண்கள், ஆண் பயணி ராஜேஷை கடுமையாக எச்சரித்தனர். அப்போது ராஜேஷ் தெரியாமல் கை பட்டு விட்டது என்று கூறி சமாளித்ததாக கூறப்படுகிறது.

 

ஆனாலும் ராஜேஷ், அதன் பின்பும், அதைப்போல் முன் இருக்கைக்குள் கையை விட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து அந்தப் பெண் பயணி மீண்டும் புகார் தெரிவித்ததும், விமான பணிப்பெண்கள் இதுகுறித்து, தலைமை விமானியிடம் தெரிவித்தனர்.

இதை அடுத்து தலைமை விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, இதைப்போல் விமானத்துக்குள் ஆண் பயணி ஒருவர், பெண் பயணிக்கு தொடர்ந்து, தொல்லை கொடுத்துக் கொண்டு இருக்கிறார். எனவே விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இதை அடுத்து விமானம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரை இறங்கியதும், விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, பயணி ராஜேஷை சுத்தி வளைத்து பிடித்தனர். அதன் பின்பு அவரை பாதுகாப்பாக  விமானத்தில் இருந்து கீழே இறக்கி, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது பாதிக்கப்பட்ட பெண் பயணியும் இண்டிகோ ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு வந்து, ராஜேஷ் மீது முறைப்படி எழுத்து மூலமாக புகார் செய்தார்.

நடுவானில் பறந்த விமானத்தில் பெண் பயணியிடம் சில்மிஷம் - சென்னை பயணி கைது…!இதை அடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் அலுவலர்கள், ராஜேஷை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். விமான நிலைய போலீசார் ராஜேஷ்சை கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்துக்குள் பயணித்துக் கொண்டிருந்த ஒரு பெண் பயணிக்கு, ஆண் பயணி ஒருவர், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததால், ஆண் பயணியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ