வடசென்னை பெண் தாதா அஞ்சலையின் மகள் மீது திருநங்கைகள் புகார் அளித்துள்ளனர். கந்துவட்டி பணத்தை வசூலிக்க திருநங்கைகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருநங்கைகளாக மாற அறுவை சிகிச்சை செய்வதற்கு கடன் கொடுப்பதாக கூறி மிரட்டி கந்து வட்டி வசூலிப்பதாக திருநங்கைகள் புகார் அளித்துள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு திருவிக நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் அலீனா திருநங்கையான இவருடன் ஏராளமான திருநங்கைகள் வசித்து வருகின்றனர். கொல்லப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் காதலியான அஞ்சலைக்கு தமிழரசி என்ற மகள் இருந்து வருகிறார்.
இவர் புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்து வருகிறார். இந்த நிலையில் திருநங்கையான ஹெலினா உள்ளிட்ட ஏராளமான திருநங்கைகளுக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்து அவர்களிடம் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வட்டி கொடுக்க முடியாத திருநங்கைகளை அடியாளாகவும் கடன் பெற்றவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி அநாகரிகமான முறையில் அவர்களை அவமானப்படுத்தி பணம் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தங்களை தமிழரசி மற்றும் அவரது கள்ளக்காதலன் டாட்டு மணி ஆகியோர் கொலைவெறி தாக்குதல் நடத்தி தங்களை கொலை முயற்சி செய்வதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் மைனர் திருநங்கைகளை தமிழரசியின் வீட்டில் வைத்துக்கொண்டு தவறான வேலைகளுக்கு பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். திருநங்கைகளை அடித்து துன்புறுத்தி அதை மற்ற திருநங்கைகளுக்கும் அனுப்பி மிரட்டுவதாக புகார் அளித்துள்ளனர். இது குறித்து தமிழரசி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது செல்போனை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அவர்கள் பணி புரியும் இடத்திற்கு வந்து கடத்தி கந்து வட்டியை வசூலித்து வருவதாகவும் பொது மக்களுக்கு கந்து வட்டியை கொடுத்துவிட்டு தங்களை அவர்களது வீடுகளுக்குச் சென்று நிர்வாண நிலையில் அவர்களை மிரட்டி பணம் வசூலிக்க செல்வதாக தெரிவித்துள்ளனர்.
அஞ்சலை மகள் தமிழரசி, மருமகன் டாட்டூ மணி மீது பேசின் பிரிட்ஜ், புளியந்தோப்பு செம்பியம் காவல் நிலையங்களில் கந்துவட்டி வழக்குகள் நிலுவையில் உள்ளது என போலீஸ் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.