Homeசெய்திகள்க்ரைம்திரைப்பட இயக்குனர் எனக் கூறி 5 பெண்களை ஏமாற்றியவர் மீது புகார்

திரைப்பட இயக்குனர் எனக் கூறி 5 பெண்களை ஏமாற்றியவர் மீது புகார்

-

- Advertisement -

திரைப்பட இயக்குனர் எனக் கூறி 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியவர் மீது திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

திரைப்பட இயக்குனர் எனக் கூறி 5 பெண்களை ஏமாற்றியவர் மீது புகார்

திருவண்ணாமலை வேங்கிக்காலை சேர்ந்தவர் பூர்ணிமா (வயது 41). இவர் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 18 ஆம் தேதி புகார் மனு அளித்தார். அந்த மனுவில் தனக்கு ஏற்கனவே கோவையில் திருமணமாகி சட்டப்படி விவாகரத்து பெற்று விட்டேன் எனவும், அதற்கு பின்னர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த லட்சுமிகாந்தன் என்னை திருமணம் செய்ய பெண் கேட்டதால் பெரியவர்கள் முன்னிலையில் கலசபாக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. அவர் சினிமா டைரக்டர் என்றும், ஏற்கனவே சினிமா படம் தயாரித்து உள்ளதாகவும் கூறி என்னை சென்னைக்கு அழைத்து சென்றார்.

திரைப்பட இயக்குனர் எனக் கூறி 5 பெண்களை ஏமாற்றியவர் மீது புகார்

சென்னைக்கு சென்ற தாங்கள் ஒரு வீட்டில் குடியேரினோம் என்றும், அப்போது என் கணவர் அடிக்கடி பல பெண்களிடம் தொலைபேசியில் பேசுவார். யார் இரவு நேரத்தில் போன் பேசுகிறீர்கள் என்று கேட்டால் என்னை அடித்து திட்டுவார்கள் என்றும், 5 வருடம் சென்னையில் இருந்த பிறகு திருவண்ணாமலையில் வீடு வாங்கலாம் என்று கூறி என்னை திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து என் பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு அடிக்கடி வந்து பார்த்து செல்வார் என்றும் தெரிவித்தார். தற்போது என் கணவர் வேறுவொரு பெண்ணிடம் பேசுவதாக கேள்விப்பட்டு விசாரித்த போது வேறுவொரு பெண்ணுடன் என் கணவன் குடும்பம் நடத்துவதாக தெரியவந்தது.

திரைப்பட இயக்குனர் எனக் கூறி 5 பெண்களை ஏமாற்றியவர் மீது புகார்

இது குறித்து அவரிடம் கேட்டதற்கு தகாத வார்த்தையால் பேசி என்னை தாக்கினார். மேலும் என்னை ஏமாற்றியது போல் இதுவரை ஐந்து பெண்களை திரைப்பட இயக்குனர் என்று கூறி திருமணம் செய்துள்ளது. தனக்கு தெரிந்ததையடுத்து தான் தற்பொழுது என் கணவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறினார்.

சினிமா பட டைரக்டர் எனவும் நடிகர் அதர்வா மற்றும் சமந்தாவை முதன் முதலில் படம் நடிக்க அறிமுகப்படுத்தியதாகவும் கூறி ஏமாற்றி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

தவெக தலைவராக மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை வழங்குகிறார் விஜய்! (apcnewstamil.com)

இது குறித்து விசாரணை நடத்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் திருவண்ணாமலை நகர துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான அனைத்து மகளிர் போலீசார் புகார் அளித்த பூர்ணிமா மற்றும் அவரது கணவர் லட்சுமிகாந்தன் ஆகியோரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.

சினிமா பட இயக்குனர் என்று கூறி ஏமாற்றிய நபரிடம் போலீசார் விசாரணை நடத்திய தகவல் வெளியில் பரவியதால் திருவண்ணாமலையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

MUST READ