spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மது போதையில் நண்பனை அடித்துக் கொலை

மது போதையில் நண்பனை அடித்துக் கொலை

-

- Advertisement -

பழனியில் மது போதையில் நண்பனை அடித்துக் கொலை செய்துவிட்டு  விபத்து என நாடகம் ஆடி தப்பிக்க முயற்சி செய்த குற்றாறவாளியை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

மது போதையில் நண்பனை அடித்துக் கொலை

we-r-hiring

பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் முத்து பிரவீன்குமார்(25) டாட்டூ போடும் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வீரமணி மகன் மாரிமுத்து(29) இருவரும் நண்பர்கள். நேற்று இரவு தாராபுரம் சாலையில் கருப்பண கவுண்டன் வலசு அருகில் இருவரும் மது அறுந்தி கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் பிரவீன் வாகனம் மோதி படுகாயம் அடைந்ததாக மாரிமுத்து போன் செய்து பிரவீன்  உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளான். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு பிரவீனை கொண்டு வந்து சேர்த்தபோது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

போலீசார் விபத்து என வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். பிரவீன் உடலில் பாட்டிலால் குத்தியது போன்ற காயம் இருப்பதை மருத்துவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் பழனி டிஎஸ்பி தனஜெயன் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தென்னரசு விசாரணை தொடங்கினார்.

மது போதையில் நண்பனை அடித்துக் கொலை

போலீஸ் விசாரணையில்   மாரிமுத்து மது அருந்த பிரவீனை அழைத்துச் சென்றதும், கொடுத்த பணத்தை கேட்டு தகராறு செய்து மது பாட்டிலால் பிரவீனை குத்தி தாக்கிவிட்டு பின்னர் சாலையில் சென்ற காரில் தள்ளி விபத்து போல சித்தரித்து நாடகமாடியதும் தெரிய வந்தது.

மாரிமுத்துவை கைது செய்த போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மது போதையில் நண்பனை கொன்றுவிட்டு விபத்து என நாடகம் மாடி போலீசில் சிக்கிய சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ