வரதட்சணை வாங்குவது குற்றம் என்று சட்டம் இருந்தாலும், நாளுக்கு நாள் வரதட்சணைக் கொடுமை அதிகாித்து தலைவிரித்து ஆடுகிறது. ரிதன்யாவைத் தொடா்ந்து வரதட்சணைக் கொடுமையால் மேலும் ஒரு இளம்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல், திக்கணங்கோடு கிழக்கு தாராவிளை பகுதியைச் சேர்ந்த ராபின்சன் என்பவரின் மகளான ஜெமலா வயது (26) இவா் நர்சிங் முடித்துள்ளாா். இவரும் இனயம்புத்தன்துறையைச் சேர்ந்த என்ஜினியரிங் படித்து முடித்துள்ள நிதின்ராஜ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவா்கள் வேறுவேறு சாதி என்பதால் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்து வந்துள்ளனா். இவா்களை சமாதானப்படுத்தி, கடந்த ஜனவரி மாதத்தில் பெற்றோரின் சம்மதத்தின் பேரில் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனா்.
இந்த தம்பதியினா் மேல்மிடாலம் அருகே கூண்டுவாஞ்சேரி வாழ்ந்து வந்த நிலையில், நிதின் ராஜ் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருவருக்கும் அடிக்கடி ஏற்படும் சண்டையினால், விரக்தியில் ஜெமலா தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.ஜெமலாவின் தாய் புஷ்பலதா தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், வரதட்சணைக் கொடுமை அளித்ததாகவும் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், திருமணத்தின் போது ரூ.7 லட்சம் பணம், 50 பவுன் நகை, வீட்டுக்கு தேவையான பொருட்களை மகளுக்காக கொடுத்தோம். ஆனால், திருமணம் முடிந்த 2 மாதத்திலேயே மேலும் 5 லட்சம் ரூபாயை வரதட்சணையாக கேட்டனர். என் மகளை நிதின்ராஜ், மாமனார், மாமியார் ஆகியோர் சேர்ந்து கொடுமைப்படுத்தி உள்ளனர். என்னிடம் எப்படியாவது பணத்தை கொடுக்குமாறு என் மகள் கூறினார். இதையடுத்து, என் செயினை அடகு வைத்து 5 லட்சம் ரூபாய் கொடுத்தேன். மேல்மிடாலம் பகுதியில் வீடு ஒன்றையும் வாங்கி கொடுத்தோம்.

ஆனாலும், எனது மகளை தொடர்ந்து அடித்துக் கொடுமைப்படுத்தி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் எனது மகளின் கழுத்தில் கயிற்றால் இறுக்கியது போன்ற தடம் உள்ளதால் மகளின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது. மகளின் சாவிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்து ஜெமலாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமணமான ஆறே மாதத்தில் காதல் திருமணம் செய்த பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.