spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மாட்டுச் சாணம் கலந்த கஞ்சா விற்ற 4 பேர் கைது

மாட்டுச் சாணம் கலந்த கஞ்சா விற்ற 4 பேர் கைது

-

- Advertisement -

மாட்டுச் சாணம் கலந்த கஞ்சா விற்ற 4 பேர் கைது

திருப்பூரில், மாட்டு சாணத்தை கஞ்சா என விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

we-r-hiring

மாட்டுச் சாணம் கலந்த கஞ்சா விற்ற 4 பேர் கைது

திருப்பூர் – மங்களம் சாலை, பழக்குடோன் பகுதியில், மத்திய போலீஸ் நிலைய ரோந்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் கஞ்சா போன்ற பொட்டலம் இருந்தது தெரிய வந்தது.

https://www.apcnewstamil.com/news/chennai/rajasthan-man-arrested-for-threatening-10-lakhs-with-nude-photo-of-woman-from-may-mambalam-chennai/825

விசாரணையில் அவர்களது பெயர் லோகநாதன்(22), உமா மகேஸ்வரன்(21) என்பது தெரிய வந்தது. மேலும், அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில், மங்கலம் சாலையில், 33 ஆயிரம் ரூபாய் கொடுத்து கஞ்சா வாங்கி வந்ததாகவும், எடை அதிகமாக இருந்ததால் சந்தேகமடைந்து பிரித்து பார்த்த போது மாட்டு சாணம், வைக்கோல் கலந்து கஞ்சா என விற்று மோசடி செய்ததாக தெரிவித்தனர்.

மாட்டுச் சாணம் கலந்த கஞ்சா விற்ற 4 பேர் கைது

இதுதொடர்பாக போலீசார் கேவிஆர் நகரை சேர்ந்த சாரதி(21), கவின்(22) ஆகிய இருவரையும் பிடித்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். லோகநாதன், உமா மகேஸ்வரன், சாரதி, கவின் ஆகிய நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

MUST READ