spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மேய்சலுக்கு விட்ட ஆடுகளை அபேஸ் செய்த கும்பல் கைது!

மேய்சலுக்கு விட்ட ஆடுகளை அபேஸ் செய்த கும்பல் கைது!

-

- Advertisement -

தாம்பரம் அருகே காரில் சென்று ஆடுகளை திருடிய கும்பல் சிசிடிவி காட்சிகள் மூலம் நான்கு பேரை கைது செய்த போலீசார். மேய்சலுக்கு விட்ட ஆடுகளை அபேஸ் செய்த கும்பல் கைது!

சென்னை தாம்பரம் சேலையூர் அடுத்த வேங்கைவாசல் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் என்கிற சுரேஷ் (வயது-53) இவர் 30 ஆடுகள் 10 மாடுகளை வைத்து மேய்த்துக்கொண்டு பால் வியாபாரம் செய்து வருகிறார்,

we-r-hiring

இந்தநிலையில் கடந்த 16ஆம் தேதி வேங்கைவாசல் இந்திரா நகர் பகுதியில் உள்ள காலி இடத்தில் ஆடு மற்றும் மாடுகளை மேய்ச்சலுக்காக விட்டுவிட்டு பன்னீர்செல்வம் மதிய உணவிற்கு வீட்டிற்கு சென்று உள்ளார்,

இதையடுத்து அன்று மாலை ஆடுகளை மந்தைக்கு அழைத்து வர சென்ற பொழுது 13 ஆடுகள் குறைவாக இருந்துள்ளது இதனால் அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் அந்தப் பகுதியில் இருந்த மக்களிடம் விசாரித்த போது அடையாளம் தெரியாத காரில் வந்த மர்ம நபர்கள் ஆடுகளை காரில் ஏற்றிக்கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பன்னீர்செல்வம் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆடு திருடு போன இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது காரில் வந்த ஆறு நபர்கள் மேச்சலில் இருந்து ஆடுகளை காரில் திருடிக் கொண்டு சென்றது தெரியவந்தது.

இந்தநிலையில் சிசிடிவி காட்சிகளில் பதிவான காரின் பதிவினைக் கொண்டு சென்னை பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார்(29), பாலகிருஷ்ணன்(40), கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த அயாஸ் சுதின்(25), நீலாங்கரை பகுதியைச் சேர்ந்த தாரிக் அகமது(42), ஆகிய நான்கு பேரை சேலையூர் போலீசார் கைது செய்து காவல் நிலையம் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், போலீசார் விசாரனையில் அயாஸ் சுதின்,தாரிக் அகமது ஆகிய இருவரும் கோழி மற்றும் மாட்டிறைச்சி கடை வைத்து நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது,

மேலும் இவர்கள் இதேபோன்று வேறு எங்காவது ஆடுகளை திருடிய உள்ளார்களா? அல்லது திருடும் ஆடுகளை இறைச்சி கடையில் வெட்டி விற்றிவிடுகிறார்களா போன்ற கோணத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் இந்த ஆடு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகள்! பாதுகாக்க குழுக்கள்…தமிழக அரசு முடிவு…

MUST READ