spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்துப்பாக்கி முனையில் பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை

துப்பாக்கி முனையில் பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை

-

- Advertisement -

துப்பாக்கி முனையில் பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை

ஹரியானா மாநிலம் பானிபட்டில் துப்பாக்கி முனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

haryana-three-women-gangraped-in-front-of-family-members-say-police

ஹரியானா மாநிலம் பானிபட்டில், ஒரு வீட்டிற்குள் நுழைந்த 4 பேர் கொண்ட கும்பல் கணவர்கள், குழந்தைகளை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 3 பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் வன்கொடுமை செய்துள்ளது. அதுமட்டுமின்றி, வீட்டில் இருந்த பணம், நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் கடந்த 20 ஆம் தேதி நடந்துள்ளது.

we-r-hiring

இந்த சம்பவம் நடந்த ஒரு கிலோமீட்டர் தொலைவில், அதே இரவில் ஒரு நோய்வாய்ப்பட்ட பெண், தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டார். மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதில் அந்த பெண் உயிரிழந்தார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் ஒரே கும்பல்தான் காரணம் என காவல்துறை தெரிவித்துள்ளது. கொள்ளை சம்பவங்கள் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும், இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

 

MUST READ