Homeசெய்திகள்க்ரைம்இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் கொலை வழக்கு - 6 பேர் கைது

இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் கொலை வழக்கு – 6 பேர் கைது

-

இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் கொலை வழக்கு – 6 பேர் கைது

பூந்தமல்லியில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் கொலை வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் பிரமுகரின் மனைவியை அபகரித்து சென்றதால் பழி தீர்த்ததாக தெரியவந்துள்ளது.

இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் கொலை வழக்கு - 6 பேர் கைது

மாங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜாஜி இவர் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநில தலைவராக இருந்து வந்தார். நேற்று மாலை பூந்தமல்லி அடுத்த குமண்ணசாவடியில் உள்ள டீ கடையில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்த போது லுங்கி மற்றும் பனியன் அணிந்தபடி வந்த மர்ம நபர் ராஜாஜியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு இறந்து போன ராஜாஜி உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவான நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது காட்டுப்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த கிருஷ்ண குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் சந்தேகத்தின் பேரில் பூந்தமல்லியை சேர்ந்த கோபால், காங்கிரஸ் கட்சியில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். மேலும் சம்பத், சந்தோஷ், ராஜேஷ் உள்பட ஆறு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் கொலை வழக்கு - 6 பேர் கைது

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது இதுகுறித்து போலீசார் கூறுகையில், காங்கிரஸ் பிரமுகரான கோபாலின் மனைவி கவுரி கடந்த சில ஆண்டுகளாக அவரை விட்டு பிரிந்து ராஜாஜியுடன் வசித்து வந்த நிலையில் அவர் கவுரியை தனது மனைவி என சமூக வலைதள பக்கங்களில் இருவரும் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் எல்லாம் பதிவிட்டு வந்துள்ளார்.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் கவுரி இறந்து போன நிலையில் பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கவுரியை தனது மனைவி என்றும் அவரது பெயரில் கல்வி அறக்கட்டளை ஆரம்பித்து உள்ளதாக ராஜாஜி போஸ்டர்கள் ஒட்டியதும் சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்களையும் வெளியிட்டு இருந்தார்.

இது கோபாலுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தி வந்தது. அது மட்டுமின்றி கோபால் சம்பாதித்த சொத்துக்களில் பாதி கவுரியின் பெயரில் இருப்பதால் அந்த சொத்து சம்பந்தமான பிரச்சனையும் கடந்த சில வாரங்களாக ராஜாஜிக்கும், கோபாலுக்கும் இடையே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் கொலை வழக்கு - 6 பேர் கைது

இதற்கிடையில் ராஜாஜியின் தம்பி கண்ணன் என்பவர் ஆட்டோ ஓட்டி வரும் நிலையில் அவருடன் சேர்ந்து கிருஷ்ணகுமார் மது அருந்திய போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கல்லை தூக்கி கண்ணன் காலில் போட்டதில் அவர் கால் உடைந்தது. இதில் கிருஷ்ணகுமார் தலைமறைவாக இருந்த நிலையில் அவரை தொடர்பு கொண்ட கோபால் காலை உடைத்து விட்டதால் ராஜாஜியும், கண்ணனும் சேர்ந்து கிருஷ்ண குமாரை கொன்று விடுவார்கள். அதற்குள் நீ முந்திக்கொள் நான் பார்த்து கொள்கிறேன் என கோபால் கூறியதாக கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் தனது மனைவியை ராஜாஜி அபகரித்து கொண்டதும் அவர் பெயரில் இருந்த சொத்துக்களையும் அவர் அபகரிக்க முயன்றதுமே காரணம் என கூறப்பட்டு வருகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார் நேற்று டீக்கடையில் அமர்ந்து டீ அருந்தி கொண்டு இருந்த ராஜாஜியை கடைக்குள் புகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு சென்றது தெரியவந்தது.

மேலும் இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். காங்கிரஸ் பிரமுகரின் மனைவியை அபகரித்து சென்ற விவகாரத்தில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் ராஜாஜி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ