spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்‘2 கொலை செய்துவிட்டேன்’ உடனே வாங்க! போலீஸ்க்கு போன் போட்ட வாலிபர்

‘2 கொலை செய்துவிட்டேன்’ உடனே வாங்க! போலீஸ்க்கு போன் போட்ட வாலிபர்

-

- Advertisement -

‘2 கொலை செய்துவிட்டேன்’ உடனே வாங்க! போலீஸ்க்கு போன் போட்ட வாலிபர்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த இடத்தில் தனியார் ஓட்டலில் மனைவி மற்றும் மைத்துனரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக மகாராஷ்டிரா மாநிலம் நந்தேடு சேர்ந்த மனிஷா – யுவராஜ் தம்பதியினர் ஷக்ஷம் (6), பிரக்யான் (4) என்ற இரு குழந்தைகள் மற்றும் மனிஷா சகோதரர் ஹர்ஷவரதனுடன் வந்தனர். திருப்பதி கபில தீர்த்தம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் அறை எண் 302 இல் வாடகைக்கு எடுத்து தங்கினர். ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு பிறகு நேற்று இரவு மீண்டும் அறைக்கு வந்தனர்.

we-r-hiring

இந்நிலையில் குழந்தைகள் அனைவரும் தூங்கிய பின்னர் பெரியவர்களுக்கு இடையே சொத்து குறித்து தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கோபம் அடைந்த யுவராஜ் மனைவி மனிஷா, மைத்துனரை பழம் வெட்ட பயன்படுத்தும் கத்தியை கொண்டு சரமாரியாக தாக்கி கொலை செய்தார். இதில் இருவரும் அறையிலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தனர். இது குறித்து யுவராஜ் போலீசாருக்கு தானே போன் செய்து கொலை செய்து விட்டதாக தெரிவித்தார்.

நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதல் – ஊர் காவல் படை காவலர் அரிவாளால் வெட்டி கொலை:

இதனை அடுத்து போலீசார் ஹோட்டலுக்கு சென்று நடந்த விவரங்களை கேட்டறிந்து யுவராஜை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொலைக்கான காரணங்களை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனிஷாவின் குழந்தைகள் இருவரையும் போலீஸ் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். இறந்தவர்கள் சடலத்தை திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

MUST READ