நடிகை பிரியங்கா மோகன் தெலுங்கில் கேங்ஸ்டர் என்ற படத்தின் பிரபலமானவர். அதன்பின் இவர் தமிழில் டாக்டர், டான் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் பின்னர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். கடைசியாக இவர் தனுஷுடன் இணைந்து கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இவர் கவின் உடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இவ்வாறு பிஸியான நடிகையாக வலம் வரும் பிரியங்கா மோகன் சமீபத்தில் நடந்த பேட்டியில் தனது சினிமா அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “நான் என்ஜினியரிங் படித்து இருக்கிறேன். படிப்பை முடித்த பின் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்தது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதை யோசித்து கூட பார்க்கவில்லை. அதற்காக முயற்சியும் செய்யவில்லை. இப்போது நான் சினிமாவில் நுழையாமல் இருந்திருந்தால் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருப்பேன். எனக்கு சிறுவயதிலிருந்தே சூப்பர் ஸ்டார் ரஜினியை ரொம்ப பிடிக்கும். அவருடைய எளிமை மிகவும் பிடிக்கும். என்றாவது ஒருநாள் ரஜினியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.