spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்திமுக செயலாளர் சுட்டுக் கொலை… பகீர் கிளப்பும் பின்னணி…

திமுக செயலாளர் சுட்டுக் கொலை… பகீர் கிளப்பும் பின்னணி…

-

- Advertisement -

சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, கரியக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராங்காடு பகுதியில் திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன்(45) துப்பாக்கிச்சூட்டில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திமுக செயலாளர் சுட்டுக் கொலை… பகீர் கிளப்பும் பின்னணி…

கிராங்காடு கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி மகன் ராஜேந்திரன், இந்து மலையாளி சமூகத்தைச் சேர்ந்தவர் மற்றும் திமுக கிராங்காடு கிளைச் செயலாளராக இருந்தார். நேற்று இரவு அவர் தன் மனைவி சரிதாவுடன் இருசக்கர வாகனத்தில் (TN 77 6649) வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கிராங்காடு வனப்பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் சுட்டனர்.

we-r-hiring

குண்டு பாய்ந்து ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே ரத்தக்குளத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி சரிதா அதிர்ச்சியில் துயரடைந்தார்.

இச்சம்பவத்துக்கு தொடர்பாக கிராங்காடு கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் (37) மற்றும் அவரது அண்ணன் பழனிச்சாமி (40) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தக் கொலையின் பின்னணியில் நீண்டகால நிலத் தகராறு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கிராங்காடு சர்வே எண் 432/4 தொடர்பான நிலப்பிரச்சனை 2016 ஆம் ஆண்டு ஆத்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் OS No: 193/2016 என்ற வழக்கில் விசாரணையில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு ராஜேந்திரன் புகாரின் அடிப்படையில், குற்ற எண் 8/2015-ல் ராஜமாணிக்கம் மற்றும் பழனிச்சாமி மீது IPC 294(b), 307, 34, 506(2) மற்றும் Arms Act 25(1)(a) பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்கள் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர்.

மரணமடைந்த ராஜேந்திரனுக்கு மனைவி சரிதா, மகள் கோகிலா (24), பரிமளா (21) மற்றும் மகன் நவீன் (19) உள்ளனர். மேற்படி சம்பவ இடத்திற்கு கரிய கோயில் காவல்துறையினர் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஜினி – பா. ரஞ்சித் சந்திப்பு…. மீண்டும் இணையுமா இந்த கூட்டணி?

MUST READ