திட்டக்குடியில் வீட்டின் பின்பக்க கதவு திறந்து பீரோவில் இருந்த 20 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் திருட்டு போலீசார் விசாரணை!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வதிஸ்டபுரம் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் இவர் திட்டக்குடி பேருந்து நிலையத்தில் பேக்கரி கடை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் இரவு குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்த பொழுது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த 20 சவரன் தங்க நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் திருடி உள்ளனர்.
காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்த இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோ திறந்து இருந்தது அதனை பார்த்த போது அதில் இருந்து நகை மற்றும் பணம் காணாமல் போனது தெரியவந்துள்ளது.
இது குறித்து திட்டக்குடி காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் ஆட்கள் இருக்கும் பொழுதே மர்ம நபர்கள் கைவரிசை காட்டி சென்றுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.