தீபாவளி பண்டிகை நேரத்தில் நகை கடையில் பணிக்கு சேர்ந்த பெண் 6 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை திருடிக் கொண்டு தப்பி ஓட்டம் என காவல் நிலையத்தில் புகார்.
தி. நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் ஜெயின், நாயர் சாலையில் சொந்தமாக நகை கடை வைத்து நடத்தி வருகிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 22 ஆம் தேதி ரேவதி என்ற பெண்மணியை பணிக்கு அமர்த்தி உள்ளார். இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி முதல் ரேவதி பணிக்கு வராததால் சந்தேகம் அடைந்து நகையை சோதனை செய்த போது போலியாக செய்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 6 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை போலியாக தயார் செய்து வைத்து விட்டு தப்பி ஓடி இருப்பது தெரிய வந்தது. மேலும், பணிக்கு சேர்ந்த போது ரேவதி கொடுத்த அனைத்து ஆவணங்களும் போலியானவை என்பதும் தெரிய வந்துள்ளது. கடையின் உரிமையாளர் சுரேஷ் மாம்பலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை.
கிக் பாக்ஸிங் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் – வழக்கு பதிவு.