Homeசெய்திகள்க்ரைம்வெறிபிடித்த தனியார் பள்ளி தலைமையாசிரியர் கைது - குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து அத்துமீறல்

வெறிபிடித்த தனியார் பள்ளி தலைமையாசிரியர் கைது – குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து அத்துமீறல்

-

- Advertisement -

வெறிபிடித்த தனியார் பள்ளி தலைமையாசிரியர் கைது - குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து அத்துமீறல்தனியார் மழலையர் பள்ளி தலைமையாசிரியர் பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டதாக கைது.

சென்னை பாலவாக்கத்தில் உள்ள மழலையர் பள்ளி ஒன்றில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருபவர் சங்கீதா(44), இவரது பள்ளியில் 22 வயது இளம்பெண் ஒருவர் தற்காலிக ஊழியராக கடந்த 4 நாட்களாக பணிபுரிந்து வருகிறார். தலைமையாசிரியர் சங்கீதா, பெண் ஊழியரை கடந்த 26ம் தேதி வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிற்கு சென்றதும் குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து குடிக்கவைத்து, வலுகட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்து அந்தரங்க பகுதிகளை கடித்து காயப்படுத்தி உள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்ற போது மருத்துவனை தகவல் காவல் நிலையத்திற்கு கிடைத்ததன் பேரில், நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை செய்து மழலையர் பள்ளி தலைமையாசிரியரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மெஜிஸ்திரேட் அவரை நீதிமன்ற பிணையில் விடுவித்தார்.

சேலத்தில் லஞ்சம் வாங்கி அலுவலர் கைது

MUST READ